பலகோடி ஹிட்லர்கள்
உக்ரைனில் கொல்லப்படுவது கொலை இல்லையா?
இலங்கையில் கொல்லப்பட்டது கொலை இல்லையா?
செங்கிஸ்கான் செய்த செயலுக்கு என்ன பெயர்?
உயிரோடு அடுக்கி கோபுரம் கட்டிய திமுரின் செயலுக்கு என்ன பெயர்?
உயிரோடு எரித்த ராணி மேரி I பெயர்
இரத்தக்களரி மேரி ஆனது பொய்யா?
லெனின் மற்றும் ஸ்டாலின் செய்த கொலைச் செயல்கள் பொய்யா?
பட்டினிப் போட்டு 4 கோடி பேர்களைக் கொன்ற மாவோவைப் போற்றலாமா?
மூன்று லட்சம் பேரை கொன்றுக்
குவித்த இடி அமீனையும் போற்றலாமா?
ஓர் உயிரைக் கொன்றாலும் அவன் கொலைக்காரனே!
லட்சம் உயிரைக் கொன்றாலும் அவன் கொலைக்காரனே!
- தஞ்சை த இராமநாதன்
































