நம்ம ஊர் பானகம்
சிறு வெள்ளத்தை பானையில் எடுத்து பனை வெல்லத்தை சிறிதாக உடைத்து
வெள்ளத்தில் வெல்லத்தைக் கரைத்து
எலுமிச்சை சாறைப் பிளிந்து சேர்த்து
சுக்கு சுக்காய் சுக்கை நறுக்கி வைத்து
ஏலக்காய் ஜாதிக்காயை இணைத்து
உப்பை அளவோடு அள்ளித் தெளித்து
அனைத்தையும் பக்குவமாய்க் கலந்து
கலவையை துணிக் கொண்டு வடித்து
துளசியைத் தூவிக் குடித்தால் சத்து!
- தஞ்சை த இராமநாதன்

Nice...
ReplyDelete