
தாய்க்குத் தலைமகனாகப் பிறந்தார் இளம் வயதிலேயே தாயாரை இழந்தார் காச நோயால் ஒரு வருடம் அவதிப் பட்டார் வேப்பமரத்தடி காற்றால் நோயிலிருந்து விடுபட்டார்
வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் புல்லாங்குழல் இசையில் உற்சாகம் பெற்றார் நல்லதொரு வேலையில் உயர் பதவிவரை அடைந்தார் குடும்ப வாழ்வில் முன் உதாரணமாகக் கடைசிவரை இருந்தார்
பாபுஜி மஹாராஜின் உண்மைத் தொண்டனாக வாழ்ந்தார் பல லட்ச சீடர்களுக்கு அன்புமிகு ஆசானாகத் திகழ்ந்தார்
தந்திரத்திற்காக மந்திரத்தைச் சொல்வோரைத் தவளை என்பார் சதிக்காகச் சாதியை வளர்த்தோரை நினைத்தால் கவலை என்பார்
பதினைந்து வருடங்களுக்கு முன்பாக சிங்கப்பூர் வந்திருந்தார் தியானத்தை முடித்தபின் சிங்கப்பூரில் சிங்கங்கள் எங்கே என்றார் சிங்கங்களுக்குப் பதிலாக ஆடுகள்தான் அமர்ந்துள்ளது இங்கே என்றார் எழுச்சியோடு எழுந்து நின்றேன் நான் ஆசீர்வாதத்தோடு மகிழ்ந்து சென்றார் அவர் ஆசீர்வாதம் கலந்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துச் சிந்திக்க வைத்தார் ஆன்மீக அறிவுமிகு ஆர்வலர்களால் ஆசிரம கட்டிடம் பெற வைத்தார்
காலம் மாறலாம் அவதாரங்களும் மாறலாம் அவதாரங்களின் மாண்பை என்றும் மறக்கலாகாது HARI பல்கலைக்கழகம் என்பது பெயர் அது CHARI என்பதில் இருக்கும் பெயர்
Chariji அவர்களை நினைத்தால் கண்ணில் வழிகிறது வெள்ளம் Chariji பெயரைச் சிங்கப்பூர் ஆசிரம கட்டிடத்திற்கு வைக்கக் கேட்கிறது உள்ளம்
சரி, CMA (Chariji Memorial Ashram, Singapore) எனப் பெயரிடுவோமா?
- தஞ்சை த.இராமநாதன்