ஒவ்வொரு ஆண்டும் வயதொன்று மேன்மேலும் கூடியபடி மேன்படும்
ஒவ்வொரு ஆண்டும் முதிர்வொன்று மேனியின்மேல் கூடியபடி தென்படும்
அறுபதைத் தாண்டினால் ஐம்புலனின் அதிர்ச்சியான மாற்றமும் தோன்றும்
எழுபதைத் தாண்டினால் எளிமையின் தொடர்ச்சியின் தோற்றமும் தோன்றும்
ஆணவத்துடன் வாழ்ந்தால் வாழ்ந்தவரின் வாழ்வு அர்த்தமற்று முடிந்திடும்
ஆனந்தத்துடன் வாழ்ந்தால் வாழ்ந்தவரின் வரலாறு ஆரவாரமற்றுத் தொடங்கிடும்
கடந்த வருடங்களில் கடந்ததைக் கவலை அடையாது கடந்து செல்வோம்
முடிந்த வயதுகளில் முடிந்ததைச் செய்யாமல் விட்டதை முயன்று செய்வோம்!
- தஞ்சை த.இராமநாதன்

👌
ReplyDelete🤝
ReplyDelete👏
ReplyDelete🤝
ReplyDelete