கண்டிப்பும் கற்பிப்பும்
கண்டிப்பவரிடம் கண்டிப்பாக கண்டிப்பு வேண்டும்
கற்பிப்பவரிடம் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும்
கையில் கைபேசியை ஒளித்து மறைக்க வேண்டாம்
மறைத்துக் கொண்டு அதைப் பற்றி பேச வேண்டாம்!
- தஞ்சை த இராமநாதன்
கண்டிப்பும் கற்பிப்பும்
கண்டிப்பவரிடம் கண்டிப்பாக கண்டிப்பு வேண்டும்
கற்பிப்பவரிடம் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும்
கையில் கைபேசியை ஒளித்து மறைக்க வேண்டாம்
மறைத்துக் கொண்டு அதைப் பற்றி பேச வேண்டாம்!
- தஞ்சை த இராமநாதன்
வாடி ஆடி அடங்கும் வாழ்க்கை
நல்லவர்களை வாடவிட்டுப் பார்ப்பது கடவுளென்றால் -
தீயவர்களை ஆடவிட்டுப் பார்ப்பது கடவுளில்லையா?
வாடினாலும் ஆடினாலும் வாடி ஆடி அடங்கப்போகும் வாழ்க்கையிது!
- தஞ்சை த இராமநாதன்
வீர இரத்தம் தமிழனின் இரத்தம்
கணவனை இழந்தக் கைம்பெண் பச்சிளம் பாலகனை அனுப்பினாள்
போர்க்களத்தில் மாண்டான் மகன்
புறமுதுகிட்டு இறந்தானென செய்தி
புறப்பட்டாள் போர்க்களம் நோக்கி
அப்படியா இறந்தான் என் மகன்?
அப்படியென்றால் அறுத்தெறிவேன்
அவனுக்குப் பாலூட்டிய மார்பகத்தை
அங்குமிங்கும் பிணக் குவியல்கள்
மகனைப் புரட்டி நிமிர்த்திப் பார்த்தாள்
முதுகினில் கத்தி முனையைக் கண்டாள்
கட்டி அணைத்துக் கர்ஜித்தாள் வீரத்தாய்
என் மகன் வீரமகன் அவன் தமிழ்மகன்
குலத்தாயின் கண்கள் குளமானது
என் குலத்தின் வீரம் நிலையானது
கோழைக் குலமே முதுகில் குத்தி வாங்குவது!
- தஞ்சை த இராமநாதன்
முயற்சிக்கு முடிவில்லை
இயன்றவரை முடிந்ததை முயன்றுப் பார்
முயன்றவரை பின் தொடர்ந்துப் பார்
முடியாததைத் தொடர்ந்து முயன்றுப் பார் முடிந்ததை முடிந்தவரை இயன்றுப் பார்
முயலாததை முயல துணிந்துப் பார்
இயலாததை இயல பணிந்துப் பார்
இயன்றதை உடனே முடிக்கப் பார்
பயின்றதை பயின்றப்படி நடக்கப் பார்
நல்வழி முயற்சியால் புகழைப் பார்
தீயவழி முயற்சியால் இகழைப் பார்!
- தஞ்சை த இராமநாதன்
அன்புள்ள இல்லம்
உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்தால் இல்லத்தினில் எதிரொலிக்கும்
கன்னத்தில் குழி ஒளிந்திருந்தால் நகைப்பதனில் பிரதிபலிக்கும்
சிரிப்பின் சிறப்போடு நாம் வாழ்ந்தால்
வாழ்க்கை சிறந்திருக்கும்
முடியின் இழப்போடு தலை இருந்தால் வழுக்கை நிறைந்திருக்கும்
அன்புடன் வாழ்க்கை அமைந்ததானால் மங்களம் நிலைத்திருக்கும்
அன்பான உள்ளம் இணைந்ததானால்
ஆனந்தம் திளைத்திருக்கும்!
- தஞ்சை த இராமநாதன்
உறவு தரும் பாசமும் பாடமும்
உயிரைக் கொடுத்த பெற்றோரின் உறவு உறவின் முறையில் முதன்மையாகுது உறவோடுப் பிறந்த உடன் பிறப்புகள் காலத்தால் பிரிய வேண்டியதாகுது
விட்டுக் கொடுத்த இளமைக்கால வட்ட உறவுகள் விட்டு விலகிப் போகுது உண்மையான உறவுகள் மட்டும் விட்டு விலகாமல் உறவோடு ஒட்டி வாழுது
உரிமையோடு உறவினர் அன்பை எதிர்ப் பார்த்தால் ஏமாற்றம் உண்டாகுது வறுமையோடு வாழும் உறவினரின் உறவோ முற்றிலும் அறுந்துப் போகுது
வளர்ந்து வாழ்ந்து கடந்து வந்தப் பாதை பாடமானதால் நா வறண்டுப் போகுது நடந்து முடிந்து தளர்ந்துக் கிடக்கையில் கண்ணீர்க் கூட அற்றுப் போகுது!
- தஞ்சை த இராமநாதன்
இனிப்பும் இனிமையும்
இனிப்பைக் கூட்டிக் கொடுப்பது இந்த வங்காள இனிப்பு விருப்பைக் காட்டிக் கொடுப்பது நாவின் உமிழ்ச் சுரப்பு
நினைத்தவுடன் சுவைக்க வைக்கும் இந்த இனிப்பு சுவைத்தவுடன் நினைக்க வைக்கும் இந்த இனிப்பு
இனிப்பை விரும்புவோர் இனிமையுடன் இருப்பாரோ தெரியாது இனிமையுடன் இருப்போர் இனிப்பை விரும்புவாரோ தெரியாது!
- தஞ்சை த இராமநாதன்
தமிழா தமிழை தமிழெனு தமிழா
தமிழைக் காக்க தமிழனுக்குப் பணம் தேவையா? தமிழைக் காக்க தமிழனுக்கு மனம் தேவையா?
தமிழை தமிலெனக் கூறிக் கொல்லுவோர் அதிகமா? தமிழை தமிழெனவே சரியாகச் சொல்லுவோர் அதிகமா?
பழத்தை பலமெனக் கூறி தமிழை பலவீனமாக்குவோர் அதிகமா? பழத்தை பழமெனவேக் கூறி தமிழை பலமாக்குவோர் அதிகமா?
தமிழை சரியாக உச்சரிப்போரை உபசரிப்போர் அதிகமா? தமிழை சரியாக வணிகமாக்குவோரை அனுசரிப்போர் அதிகமா?
தன் புகழுக்காக தமிழை முன் நிறுத்துவோர் அதிகமா? தமிழின் புகழுக்காக தமிழை முன் நிறுத்துவோர் அதிகமா?
தாய்மொழிப் பேசும் சாமானியத் தமிழன் தேர்தலில் வெல்வது அதிகமா? வாய்மொழிப் பேசும் எஜமானியத் தமிழன் தேர்தலில் வெல்வது அதிகமா?
- தஞ்சை த இராமநாதன்
கையைப் பேச வைக்கும் கைபேசி
கையை வைத்தே பேச வைக்குது
கையை வைத்தே பார்க்க வைக்குது
கையை வைத்தே கேட்க வைக்குது
கையை வைத்தே வாங்க வைக்குது
உலகம் உன்னிடம் கையேந்தி நிற்குது
உன்னை விட்டால் பைத்தியம் பிடிக்குது
கண்கள் உன்னை காதலோடு பார்க்குது
பார்க்கா விட்டால் மனமோ துடிக்குது
காலத்தின் கட்டாயமா கையோடு கலந்த கைபேசி?
மழலைக் கைக்கும் கட்டாயமா என்பதை யோசி!
முப்பது கோடிக்கு கட்டாயத் தேவையா இந்த கைபேசி?
எழுபது கோடிக்கு இல்லையே கழிவறை மானத்தோடு யோசி!
- தஞ்சை த இராமநாதன்
பூனை என்றுமே யானையாகாது
நோட்டைக் கொடுத்து ஓட்டுக்கு வேட்டு
ஓட்டைக் கெடுத்து நாட்டுக்கே வேட்டு
ஓட்டைப் பெற்று ஓடுவதும் உண்டு
பட்டையைப் போடக் கூடுவதும் உண்டு
காட்டில் வாழ்ந்தால் யானைக்குப் பலம்
ரோட்டுக்கு வந்தால் பூனைக்கும் பலம்
காலம் மாறினாலும் யானை யானையே
களம் மாறினாலும் பூனை பூனையே!
- தஞ்சை த இராமநாதன்
சிங்கப் பார்வை
ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்தானதாய் இல்லை வரலாறு அசிங்கங்கள் சிங்கம்போல் நடித்தாலும் சிங்கமானதாய் இல்லை வரலாறு
கம்பீரப் பார்வை சிங்கக் குணம் களவாணிப் பார்வை அசிங்கக் குணம் நேருக்கு நேர் மோதுவது சிங்கக் குணம் பதுங்கி வீழ்த்துவது கோழைக் குணம்!
- தஞ்சை த இராமநாதன்
வானத்தில் வண்ண வில்
வானத்தில் வில் இப்படியிருக்கு! வானத்திலேயே வில் எப்படியிருக்கு?
அம்பில்லாது வில் இப்படியிருக்கு!
அம்பில்லாமல் வில் எப்படியிருக்கு?
அந்தரத்தில் வில் இப்படியிருக்கு அந்தரத்திலேயே வில் எப்படியிருக்கு?
ஏழு வண்ணத்தில் வில் இப்படியிருக்கு!
ஏழும் கலந்து எப்படி இப்படியிருக்கு?
அம்போடு இருந்த வில் இங்கே இருக்கு!
வில்லை விட்ட அம்பு எங்கே இருக்கு?
எய்தவன் இல்லாது அம்பா இருக்கு!
கதிரவன் இல்லாமலா இவை இருக்கு?
- தஞ்சை த இராமநாதன்
நடக்கும் குதிரையில் சவ்வாரியா?
வாத்தியக் குழுவும் நடக்குது மெதுவாக
குதிரையும் சேர்ந்தே நடக்குது மெதுவாக
மெதுவாக நடப்பது எளிது பொதுவாக
இதில் குதிரைச் சவ்வாரியோ ஏதுவாக
நடக்க முடிந்தவர் நடக்காதது எதனால்?
ஓடக் கூடியதை நடக்க விட்டது எதனால்?
முடிக்க முடிந்ததை முடிக்காதது எதனால்?
முடி சூடுவது பரம்பரையென ஆனதும் எதனால்?
- தஞ்சை த இராமநாதன்
வீட்டுக் கொல்லைக் கரும்பு
கரனை வழி முளையிடும் செங்கரும்பு
கரு கருவென வளரும் பச்சைக் கரும்பு
பார் பாராய் பாத்திக்குள் வளரும் கரும்பு
சொணை மிகுந்த தோகைக் கரும்பு
இனிய சுவை கொண்ட தீங்கரும்பு
வளர்ந்தாலும் வளையாது இக்கரும்பு!
- தஞ்சை த இராமநாதன்
நிலமென்னும் நல்லாள்
நீரோடு நெருப்பு கூடலாம்
வானோடு காற்று ஆடலாம்
நானும் கூடி ஆட நினைத்தால்.....
-- தஞ்சை த இராமநாதன்
பிறவா நிலை வேண்டுமா?
ஏய்த்து ஏய்த்துப் பிழைப்பவன் ஏய்த்து ஏய்த்துப் பிழைக்கவே துடிக்கின்றான் கொடுத்துக் கொடுத்து ஏமாந்தவன் ஏமாந்ததை எண்ணித் துடிக்கின்றான்
ஏய்த்து ஏய்த்துப் பிழைத்தவன் ஏமாந்து இரக்கும் நிலையை அடைகின்றான் ஏமாந்து ஏமாந்து தப்பிப் பிழைத்தவன் பிறவா நிலையை அடைகின்றான்!
- தஞ்சை த இராமநாதன்
பொற்கால கற்கோயில்கள்
செஞ்சிப் பசங்க செஞ்ச வேலைங்க செய்யாததையா செஞ்சதா சொல்லுவாங்க? கல்லை ஒட்டி கோயிலைக் கட்டினவங்க கல்லைக் காட்டி கலையைக் காட்டிருக்காங்க!
கல்லோடுக் கல்லை அடுக்கச் தெரிந்த தொழில் நுட்பப் பரம்பரை! சொல்லுக்குச் சொல்லைத் தொடுக்கத் தெரிந்த நாகரீகப் பரம்பரை!
கோயில் இல்லாத ஊரில் தமிழ்க் குடி இருந்ததாக வரலாறே இல்லை! கல்லால் கட்டியக் கோயிலால் கோளாறு என்றும் வந்ததே இல்லை!
- தஞ்சை த இராமநாதன்
மனிதனா அவன்?
வளர்ந்தக் கதை மறந்து விட்டால் மனிதனா அவன்? வந்தப் பாதை மறந்து விட்டால் மனிதனா அவன்?
இருக்கும் போது இல்லையென்றால் மனிதனா அவன்? இறக்கும் போதும் தொல்லையென்றால் மனிதனா அவன்?
பணத்தை வைத்து கெத்தைக் கொண்டால் மனிதனா அவன்? மானத்தை வித்து சொத்தைக் கொண்டால் மனிதனா அவன்?
- தஞ்சை த இராமநாதன்
பார்க்கும் தூரத்தில் இருக்கின்றேன்
பார்த்தும் துயரத்தில் இருக்கின்றேன்
சிறுகடலை நீந்தவே முடியாத உனக்கு
பெருங்கடலை நீந்தவா முடியும் உனக்கு?
சிலவற்றை அடைய முடியாத உனக்கு
பலவற்றை அடைய முடியுமா உனக்கு?
என் குறளுக்கு புதுப்புதுத் தெளிவுரை
குளறுபடியான விசித்திரத் தலைமுறை!
அறத்தோடு வாழ்வை நாளும் கடத்து
பொருளற்ற பேச்சை உடனே நிறுத்து
மகிழ்வுடன் உறங்கு நாளும் படுத்து
இறையை உன்னுள் நிலைநிறுத்து!
- தஞ்சை த இராமநாதன்
பணத்தைப் பற்றியப் பாட்டு
பொருளை மதிப்பிடப் பணம் தேவை
சேவையை மதிப்பிடப் பணம் தேவை
கடன் கொடுத்திடப் பணம் தேவை
திருப்பிக் கொடுத்திட மனம் தேவை
ஏழை என்பது பணத்தை வைத்து
வசதி என்பதும் பணத்தை வைத்து
சண்டை வருவது பணத்தை வைத்து
சமாதானம் வருவதோ மனதை வைத்து
பணத்திற்காகப் படும்பாடு பெரும்பாடு
பணம் படுத்தும் பாடும் பெரும்பாடு
பணத்தால் தாறுமாறாகும் கட்டுப்பாடு
மனத்தால் நிலையாகும் கடப்பாடு!
- தஞ்சை த இராமநாதன்
அண்டிமாவெனும் முந்திரிப் பழம்
முந்திரிக்கு என்றும் கொட்டையழகு மந்திரிக்கு இன்றும் சொட்டையழகு முந்திரியெனில் தொண்டையில் கரகரப்பு மந்திரியெனில் தொண்டையே கரகரப்பு
பிரேசிலில் தோன்றியது வரலாற்றுப்படி அதைப் பிற நாட்டுடையது என்பது குளறுபடி புரட்சிகரத்துடன் சிவப்பாய் இருக்கும் மங்களகரத்துடன் மஞ்சளாய் இருக்கும்
அன்றைய சித்தர்கள் பார்வையில் பனம் சீத்தா முந்திரியென தாமசக் கனிகள் இன்றையப் பக்தர்கள் பார்வையில் மா பலா வாழையென சுவைக் கனிகள்!
- தஞ்சை த இராமநாதன்
தாயும் தாரமும்
தாரத்திற்கு முன் தாயே எல்லாமும் தாய்க்குப் பின் தாரமே எல்லாமும்
பெற்றுக் காத்தத் தாயே எல்லாமும் பேணிக் காக்கும் தாரமே எல்லாமும்
தவழும்போது கை கொடுத்தது தாய் தடுமாறும்போது கை கொடுப்பது தாரம்
சுவையை அறிந்தபோது ஊட்டியது தாய் சுவையை மறந்தபோது ஊட்டுவது தாரம்
தாயை இழந்தால் சோகத்தில் மூழ்கிடும் தாயில்லா மகனின் வாழ்க்கை
தாரத்தை இழந்தால் பரிதாபத்தில் முடிந்திடும் கணவனின் வாழ்க்கை!
- தஞ்சை த இராமநாதன்
சண்டையிட்டுச் சாவதில் சந்தோசம்
நடவு இடச் செய்து வெறுப்பைச் சேர்த்து எளிதாக எதிரியாக்கி விடுவர் முகைய இடச் செய்து பகையைச் சேர்த்து முழுதாக எதிரியாக்கி விடுவர் உசுப்பேற்றி மோசமாக மோதச் செய்து சேவலை சாவ விடுவர்
பந்தியில் சண்டை பந்தயத்தில் சண்டை பந்தாவிலும் பெரும் சண்டை போட்டியில் சண்டை பேட்டியில் சண்டை பட்டியிலும் பெரும் சண்டை மாட்டுச் சண்டை நாட்டுச் சண்டை வீட்டிலும் பெரும் சண்டை கேலியால் சண்டை தோழியால் சண்டை கோழியாலும் பெரும் சண்டை!
- தஞ்சை த இராமநாதன்
சட்டம் போட்டு ---- திட்டம் போட்டு
கடைத் தெருவில் நடைபாதை இருப்பது உலகிலுள்ள இயல்பு நடைபாதையில் கடை விரிப்பது உலகிலில்லா இயல்பு
நடு பாதையில் கடை விரித்தால் சட்டப்படி குற்றம் என்பது சரியே திட்டப்படி மிதிவண்டியைப் பயன்படுத்த நிறுத்தம் இருப்பது முற்றிலும் சரியே
உடற் பயிற்சியை ஊக்குவிக்கத்தான் மிதிவண்டி என்றால் அது சரியே நடைப் பயிற்சியை தடுக்கத்தான் அது என்றால் இல்லை சரியே!
- தஞ்சை த இராமநாதன்
😢மாறிப் போனது காலம்😭
அப்பா இருக்கும் வரை அப்பாவின் அருமை அதிகம் தெரிவதில்லை அப்பா இருக்கும் வரை அப்பாவின் அர்ப்பணிப்பு அதிகம் புரிவதில்லை
அழுத போதெல்லாம் அழாதே என சொல்லாமல் அப்பா இருந்ததில்லை இனி அழும் போதெல்லாம் அழாதே என சொல்ல அப்பா இருக்கப் போவதில்லை
அனைவர் கையிலும் கைபேசி அடக்கம் அப்பாவின் உடலோ பெட்டியில் முடக்கம் அழுதுத் துடிக்க பிள்ளைக்குத் தயக்கம் அழாது சமாளித்தாலும் தீராது துக்கம்!
- தஞ்சை த இராமநாதன்
எது ஊனம்?
உள்ளத்தின் ஊனத்தோடு வேலை செய்யாதோர் நல்ல ஏய்ப்பாளிகள் உடலின் ஊனத்தோடு வேலை செய்வோர் நல்ல உழைப்பாளிகள்
ஏய்த்துப் பிழைப்போர்க்கு ஏராளப் பொருளைக் கொடுக்கும் இறைவா!உழைத்துப் பிழைப்போர்க்கு தாராள அருளைக் கொடுத்திடு இறைவா!
ஏய்க்க வேண்டுவோர்க்கு ஏய்ப்பைக் கொடுத்து திருந்த வை இறைவா! உழைக்க விரும்புவோர்க்கு உழைப்பைக் கொடுத்து உயிர்ப் பிழைக்க வை இறைவா!
- தஞ்சை த இராமநாதன்
நன்னீராடல்
உச்சந் தலையில் ஊற்றியத் தண்ணி உள்ளம் குளிருது அதை எண்ணி குளம் இல்லாதக் குடத்தடித் தண்ணி நலம் காக்குமென மனதில் எண்ணி
மலைக்குப் போகும் சாமிக்குத் தண்ணி மலையில் இருக்கும் சாமிக்கும் தண்ணி உடலைச் சுத்தம் பண்ணுதுத் தண்ணி மனதைக் குளிரச் செய்வதும் தண்ணி
வளரும் மகனின் தலைக்குத் தண்ணி வளர்ந்த மகனின் தலைக்கும் தண்ணி பாடமாய் அன்று தலைக்குத் தண்ணி படமாய் இன்று தலைக்குத் தண்ணி!
- தஞ்சை த இராமநாதன்
வலம் வந்து இடம் மாறட்டும்
தூணினுள் துகளாக இருப்பவர் இரும்பினுள் துரும்பாக இருப்பவர் ஊர்வலத்தில் நகரினுள் இருப்பவர் நகர்வலத்தில் ஊரினுள் இருப்பவர்
மானிடர்களை மகிழ்விக்க மனித ரூபம் விஷமிகளை வீழ்த்த விஷ்வ ரூபம் இறப்பை நினைக்க விபூதி ரூபம் இறுமாப்பை நீக்க பூத ரூபம்
மதம் பிடித்தப் பேதையை விரட்டடும் மது குடித்தப் போதையை விரட்டடும் ஊழை நீக்கி மனிதன் ஆக்கட்டும் உள்ளழுக்கை நீக்கி மகான் ஆக்கட்டும்!
- தஞ்சை த இராமநாதன்
எட்டு நடைப் பயிற்சி
நெட்டு வாக்கில் நடந்தது அப்போ எட்டு வாக்கில் நடப்பது இப்போ நேர்வழியில் நடந்தது அப்போ குறுக்கு வழியில் நடப்பது இப்போ
எட்டு எட்டாய்த் தொடங்கியது அப்போ எட்டுக்குள்ளேயே அடங்கியது இப்போ கிழக்கு மேற்காய் வளர்ந்தது அப்போ தெற்கு வடக்காய் தளர்ந்தது இப்போ
உரிமம் வாங்க எட்டுப் போட்டது அப்போ உபாதை நீங்க எட்டுப் போடுவது இப்போ ஏட்டுக்காக கவிதை எழுதியது அப்போ எட்டுக்காகவும் கவிதை எழுதுவது இப்போ!
- தஞ்சை த இராமநாதன்
ஆடும் வண்ணம்
ஆடியப் பெண்ணை ஆடும் வண்ணம் ஆடும் பெண்ணாகக் காட்டும் வண்ணம் அனுபவக் கையால் தீட்டிய வண்ணம் அனுபவத்தைக் காட்டிய வண்ணம்!
- தஞ்சை த இராமநாதன்