தன்னைத் தானே பார்த்தல்
பூனையின் பிம்பம் புலியாகத் தெரியலாம்
புலியின் பிம்பம் கிலியைத் தருவதாகத் தெரியலாம்
சிங்கத்தின் பிம்பம் அசிங்கமாகத் தெரியலாம்
அசிங்கத்தின் ஜம்பம் சிங்கமாகக் கூடத்
தெரியலாம்
மனிதனின் அங்கம் அசல் குரங்காகத் தெரியலாம்
குரங்கின் பிம்பம் மனிதனாகக் கூடத்
தெரியலாம்
புறத்தின் கண்ணாடியில் முகம்
அழகாகத் தெரியலாம்
அகத்தின் கண்ணாடியில் அகம் அசிங்கமாகத் தெரியலாம்!
- தஞ்சை த இராமநாதன்




























