உப்பிட்டவரை உயிருள்ளவரை மறக்க முடியுமா?
பெருமளவில் பிரியாணி சமைத்து சிறிதளவு உப்போடு உண்டதை மறக்க முடியுமா?
பெருமளவில் பிரியாணியை பந்தியில் உப்புக் கரிக்க உண்டதை மறக்கத்தான் முடியுமா?
அளவோடு உப்பிட்டு அலாதி சுவையில்
சாப்பிட்ட பழங்காலப் பண்டத்தை மறக்க முடியுமா?
அளவில்லா உப்போடு துப்பிட வைக்கும்
இக்காலப் பண்டத்தை மறக்கத்தான் முடியுமா?
அளவோடு உப்பிட்டவரை மறந்தாலும் அளவில்லாது உப்பிட்டவரை மறக்கத்தான் முடியுமா?
- தஞ்சை த இராமநாதன்

Arumai annan
ReplyDelete🤝🤝
Delete