Saturday, 20 August 2022

கடலில் சுதந்திரமா? கடலுக்கு சுதந்திரமா?

கடலில் சுதந்திரமா? கடலுக்கு சுதந்திரமா?

தரையின் எல்லையாக வேலியாலே எல்லையை அமைத்துப் பிரித்தோம்
வான் எல்லையாக தரையிலேயே                      எல்லையைப் பிரித்து அமைத்தோம்
கடலின் எல்லையாக அலையிலே
எல்லையைப் பிரித்து மிதந்தோம்
தரையைப் பிரித்ததாலே தரை தாண்டி
சென்று சேர்வதைத் தடுத்தோம்
காற்றைத் தடுத்து எல்லையைத் தாண்டாது
தடுக்க முயன்றாலும் தோற்போம்
எல்லையைத் தாண்டும் மீனவரைத் தடுத்து
மீனைத் தடுக்க முடியாது திகைப்போம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment