காலைப் பொழுதின் கதிரவன் ஒளியில் நானும் கருணாநிதியும் நடந்தோம் காலளவு ஓடிய கல்லணைக் கால்வாய் பாலத்தில் கால் வைத்துக் கடந்தோம்
பாலத்தில் தவழ்ந்த காற்றோசையில் கரிகாலனென இசைக்கக் கேட்டோம்
பரந்து விரிந்த அரசமரம் அசைந்தாடப் பறவைகள் பறந்தோடக் கண்டோம்
கல்லணைக் கண்ட சோழனைப் போல் கள்ளமில்லா களிப்போடு மகிழ்ந்தோம்
ஆற்றங்கரையோரக் கடைக்குப் போய் ஆற அமர சூடான தேநீரை நுகர்ந்தோம்
நண்பர்கள் நடந்தது தஞ்சை தரணியின் நீலகிரி கோட்டத்தில் இராமநாதபுரம்
இராமநாதன் கவிதைத் தோட்டத்தில் மலர்ந்த பூவினால் கிடைத்ததுப் பெருமிதம்!
- தஞ்சை த.இராமநாதன்






