Wednesday, 15 January 2025

மாட்டுப் பொங்கல் 2025

மாடு கட்டி வாழ்ந்தபோது மாடியில்லா வாழ்வெனினும் மட்டில்லா பொங்கல்                மாடி கட்டி வாழும்போது மாடு இருக்கும் வாழ்வாயின் மாடுள்ள பொங்கல் 

மாமிசங்களைச் சேர்த்துத் தின்றாலும்   மனிதன் தரும் புல்லைத் தின்னும்
மணியை ஆடும்போது ஆட விட்டாலும் ஆடுவதைப் பொறுத்தவாறே உறங்கும்

உழவு மாடுகள் கிராம வீட்டை விட்டு        விலகி வணிகரிடம் போகக் கூடாது
கறவை மாடுகள் நகரச் சாலையில் கூடி 
கூட்டமாகப் படுத்துப் பேசிடக் கூடாது

மரபோடு மறவாது மாட்டுப் பொங்கலை மறவாமல் மறத் தமிழராகவும் முடியும்       மாண்பை மறவாது வீட்டுப் பொங்கலை மாற்றாமல் வீரத் தமிழராகவும் முடியும்!

- தஞ்சை த.இராமநாதன் 

2 comments: