உள்வெளி
பறந்து செல்லும் விமானத்தின் வழி பரந்த ஆகாயத்தின் விண்வெளி
மிதந்து செல்லும் கப்பலின் வழி மிதந்த கடலின் மீன்வெளி
அசைந்து செல்லும் காற்றின் வழி திறந்த வெட்ட வெளி
விரைந்து செல்லும் ஆற்றின் வழி நிறைந்த வெள்ளோட்ட வெளி
மேய்ந்து செல்லும் மாட்டின் வழி பசுமையோடு மேய புல்வெளி
தேய்ந்து செல்லும் காட்டின் வழி புதுமையோடு மாய கல்வெளி
எண்ணற்ற கொள்ளையின் வழி ஆபத்தின் வன்ம புள்வெளி
எண்ணமற்ற கொள்கையின் வழி ஆனந்தத்தின் ஆன்ம உள்வெளி!
- தஞ்சை த.இராமநாதன்

சிறப்பு!
ReplyDelete🙏🙏
Deleteஅருமை 🙏👌
ReplyDelete🙏🙏
Delete