யார் மாற வேண்டும்?
அவொ நல்லா இருக்கோவலா என்போர் மாற வேண்டுமா?
அவா நன்னா இருக்காலா என்போர் மாற வேண்டுமா?
எப்ப வந்திய என அழைப்போர் மாற வேண்டுமா?
எப்போ வந்தேல் என அழைப்போர் மாற வேண்டுமா?
இன்னா இப்பீடி பேசிக்கினே ஈக்கிற என பேசுவோர் மாற வேண்டுமா?
என்னாலா இப்பிடி பேசலாமாலா என பேசுவோர் மாற வேண்டுமா?
ஏனுங்கோ என்ன சொல்லீறிங்கோ என சொல்லபவர்கள் மாற வேண்டுமா?
ஏலே இப்ப நீ என்னல சொல்லுல என சொல்பவர்கள் மாற வேண்டுமா?
வாங்கப்பு வந்து குந்துங்கப்பு என உட்கார கூப்பிடுவோர் மாற வேண்டுமா?
வாங்கோ வந்து உட்காருங்கோ எனக் குந்தக் கூப்பிடுவோர் மாற வேண்டுமா?
யாரும் மாறப் போவதுமில்லை..
மாற்றம் ஒன்றே மாறாததென... சொல்லாமல்.... இறக்கப் போவதுமில்லை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment