போகிறது 2023 வருகிறது 2024
போன வருடத்தில் நம்மை விட்டுப் போனவரிடத்தைப் பிடிப்பதும் அரிது
சென்ற வருடத்தில் நம்மை விட்டுச் சென்றவர்களைப் படிப்பதும் அரிது
போன வருடம் எப்படிப் போனதென்றே தெரியவுமில்லை
வரும் வருடம் எப்படிப் போகுமென்று தெரிவதுமில்லை
வருடத்தைப் போக்க வருடாவருடம் வருந்தாதவருமில்லை
வருத்தத்தைப் போக்க வருடாவருடம் வணங்காதவருமில்லை
2023 வந்தபோது Happy New Year என்று சொன்னவரே அதிகம்
2023 போகும்போது Happy Year End என்று சொல்லாதவரே அதிகம்
2023 வருடத்தை Happy Year End என்றே பின்னோக்கிச் சொல்வோம் நன்று
2024 வருடத்தை Happy New Year என்றே முன்னோக்கிச் செல்வோம் இன்று!
- தஞ்சை த இராமநாதன்






