எம்மாதிரி உலகமிது?
அன்பைக் கொடுத்து அரவணைத்து மன்னித்து வாழச் சொன்னாரே ஒருவர்
ஆனால் அவரை...
சிலுவையில் அறைந்து கொன்ற பிறகு போற்றிப் புகழும் உலகமே இது!
எளிய வாழ்வோடு அடிமையை அகற்றி சுதந்திரம் பெற்றுத் தந்தாரே ஒருவர்
ஆனால் அவரை...
சுட்டுத் துடிதுடிக்கக் கொன்ற பிறகு புகழ்ந்து போற்றும் உலகமே இது!
கை கொடுத்துத் தூக்கிவிட்டுக் காலூன்றி எழ வைத்து
எவரை யார் வாழ வைத்தாலும்...
நன்றி கெட்ட நயவஞ்சக மனிதர்கள் நிறைந்த கேடு கெட்ட உலகமோ இது?
- தஞ்சை த.இராமநாதன்

Yes , we all living such kind of people surrounded ,
ReplyDelete🤝🙏
ReplyDelete