Sunday, 24 December 2023

நலமும் வளமும் வேண்டுமா?

 

நலமும் வளமும் வேண்டுமா?

பணத்தைப் பார்த்ததும் அடங்காது ஆடினால் பட்டம்போல் பறந்து வீழ்வாய்

உன்னிடம் இப்போது இருக்கும் எதுவும் எப்போதும் இருக்காது உணர்வாய்

ஆணவத்தால் அலட்சியம் கொண்டால்
கண்டபடி இகழப்பட்டு ஒழிவாய்

நீ படித்ததுதான் பெரிதென நினைத்தால் உலகளவில் நீ பூச்சியமென அறிவாய்

புகழுக்காகப் பொறாமைக் கொண்டு அலைந்தால் அலைந்தே அழிவாய்

வேண்டாததை அகற்றி வாழ்ந்தால் நலத்தோடும் வளத்தோடும் வாழ்வாய்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment