Wednesday, 6 December 2023

சென்னையில் மழையும் புயலும்

 

சென்னையில் மழையும் புயலும் 

நீர் உயர விளை உயர்ந்தால் அது விவசாயப் பண்ணை; நீர் உயர விலை உயர்ந்தால் அது விசித்திரச் சென்னை 

சாலையெல்லாம் சிலை இருப்பது பகுத்தறிவற்ற அரசியல் அமைப்பு; காலமெல்லாம் சாலை மிதப்பது  பக்குவமற்ற ஆட்சியின் அமைப்பு 

தலைநகராக இருக்கும் தகுதி இனிமேல் இல்லை சென்னப்ப நாயக்கரின் சென்னைக்கு; தலைநகராகும் தகுதி இனிமேல் இருப்பது இராஜராஜ சோழனின் தஞ்சைக்கு 

மழை வரும்போது மட்டும் கூக்குரல் எழுப்புவது தமிழரின் அறிவற்றச் செயல்; மழை வருமென அறிந்து உரிமைக் குரல் எழுப்புவதே தமிழரின் அறிவான செயல் 

படித்தவரும் பண்பாளரும் அரசியலுக்கு  வர மக்கள் ஆதரவு தரவேண்டும்;  கல்லாதவரும் பொல்லாதவரும் அரசியலை விட்டு விலகும் நிலை வரவேண்டும் 

சாதிக்காகக் கட்சி என்பதைத் தடை செய்ய வேண்டும்; தமிழர் யாவும் ஒரே குலமாக ஒன்றுபட்டு உயர வேண்டும் 

மும்மாரி மழை பெய்து தமிழ் நிலம் செழிக்க வேண்டும்; வெள்ளம் வந்தாலும் வடியக் கூடிய விடியல் பிறக்க வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

2 comments: