Wednesday, 27 December 2023

தும்மல் 25 அடிவரைக் கடக்கும்

 


தும்மல் 25 அடிவரைக் கடக்கும்

கண்டபடி கண்ட இடத்தில் அநாகரீகமாக
ஆடு தும்மலாம் - மாடு தும்மலாம்
நாய் தும்மலாம் - நரி தும்மலாம்
மனிதன் தும்மலாமா?

சாப்பாடோ சந்திப்போ அநாகரீகமாக
யானை தும்மலாம் - பூனை தும்மலாம்
கழுதைத் தும்மலாம் -  கரடி தும்மலாம்
மனிதன் தும்மலாமா?

படித்து முடித்தும் மாறவில்லை
பணத்தைப் பார்த்தும் மாறவில்லை 

நல்லவரைப் பார்த்தாவது மாறுங்கள்
தும்மும் தும்மலை மூடியவாறு தும்முங்கள்!

- தஞ்சை த இராமநாதன்


2 comments: