பயிற்சியோடுக் கூடிய முயற்சி
மலை ஏறுவது சளைப்பாக இருந்தாலும்
மலை ஏறுபவர் சளைப்படைவதில்லை
மலை ஏறுவது களைப்பாக இருந்தாலும்
மலை ஏறுபவர் களைப்படைவதில்லை
பயிற்சிப் பெற்றவர் மலை ஏறினாலும் முயற்சி இல்லாமல் ஏற முடிவதில்லை
பயிற்சிப் பெறாதவர் முயற்சித்தாலும் முயற்சி உடனே கைகூடி வருவதில்லை
புகழ்ச்சிக்காக மலையேறச் சென்றாலும்
முயற்சிக்கு இகழ்ச்சி வருவதில்லை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment