ஆதாயமின்றி ஆட்டை மேய்ப்பவர் இல்லை
ஆதாயம் இல்லாமல் ஆட்டைக் கட்டிப் காப்பவரும் உலகத்தில் இல்லை
ஆதாயம் இல்லாமல் ஆட்டை ஓட்டி மேய்ப்பவரும் உலகத்தில் இல்லை
ஆட்டை வெட்டும்போது கட்டிக் காத்ததை
நினைப்பவரும் உலகத்தில் இல்லை
சாப்பாட்டை வெட்டும்போது மேய்த்ததை
நினைப்பவரும் உலகத்தில் இல்லை
கொன்ற பாவம் தின்றால் போகுமென
பேசாதவர் உலகத்தில் இல்லை
தின்ற பாவம் கொன்றால் போகுமென பேசுபவரும் உலகத்தில் இல்லை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment