இட்லியில் இருக்கு சத்து
முழு உளுந்தை ஊற வைத்து கருப்புத் தோலை மிதக்க வைத்து
மிதப்பதைக் கையால் நீக்க வைத்து
மீண்டும் நீரைக் கலக்க வைத்து
வடித்துத் தோலை நீக்க வைத்து
வெள்ளை உளுந்தை ஒதுக்கி வைத்து
அரிசியைத் தனியாக ஊற வைத்து அழுக்கு நீரை வடிய வைத்து
ஆட்டுக் கல்லில் ஆட்ட வைத்து
தனிப் பாத்திரத்தில் எடுத்து வைத்து
உளுந்து மாவைக் கலக்க வைத்து
நொதியால் மாவைப் புளிக்க வைத்து
துணியின் துணையோடு வேக வைத்து
உடனே உண்ண வேண்டும் சுவைத்து!
- தஞ்சை த இராமநாதன்

ReplyDeleteசிறப்பு!
🤝🤝
Delete