Friday, 5 August 2022

வெகுண்டு எழுந்ததோ காவிரி?

 

வெகுண்டு எழுந்ததோ காவிரி?

ஆற்றிலே ஆர்த்தெழும் காவிரியே ஆடியிலேயே ஆடி கடலைத் தேடி ஓடி கலந்துவிடத்தான் இந்த ஓட்டமா?

படிக்காதோர் படித்தார் போன்றும் படித்தார் படிக்காதோர் போன்றும் ஆனதைக் கண்டிக்கவே இந்த ஓட்டமா?

இல்லாதோர் இருப்போரைப் போன்றும் இருப்போர் இல்லாதோரைப் போன்றும் ஆனதைத் தண்டிக்கவே இந்த ஓட்டமா?

குறிஞ்சியில் நீரோட்டம் பின் முல்லை மருதத்தில் வெள்ளோட்டம் அதன் பின் நெய்தலில் நிலையான அலை ஆட்டமா?

- தஞ்சை த இராமநாதன்

2 comments:

  1. ஆராவரமற்று வறண்டு போனது சிலகாலம்...ஆர்ப்பரித்து மிரட்டி உருட்டி நிற்பது நிகழ்காலம்.....இயற்கை யின் சீற்றமும்...சீரமைப்பும்...கலிக்கால மானிடனின் மாண்பைச் சீரமைக்க நடத்தப்படும் மாதிரி நாடகமோ???..நாடகத்தின் உட்சத்தில் மானிடம் வீழுமோ... விழித்தெழுமோ???🤔

    ReplyDelete