Sunday, 7 August 2022

லாலாஜி மஹாராஜ்


 லாலாஜி மஹாராஜ்

உத்திரப்பிரதேசத்தில் உதித்தவர் இவர்
எத்தேசத்திலும் நிலைத்தவர் இவர்
ராஜயோகாவில் ராஜாதி ராஜர் இவர்
ராஜபோக வாழ்க்கை வம்சத்தவர் இவர்
பதஞ்சலிப் பாதையில் நடந்தவர் இவர்
பாதையை குறுகத் தறித்தவர் இவர்
ஹத யோகாவை தவிர்த்தவர் இவர்
மத மோகாவை வெறுத்தவர் இவர்
பிரணாஹுதி கண்டெடுத்தவர் இவர்
மரணபீதி வென்றெடுத்தவர் இவர்
மூன்றுடல் அடங்கிய ஓருடல் என்றவர் இவர்
மூன்றானது சத் ராஜ் தம் என்றவர்  இவர்
லெளகீகத்தை துறக்காதவர் இவர்
ஆன்மிகத்தை மறக்காதவர் இவர்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment