Wednesday, 10 August 2022

தியாகம்

 

தியாகம்

யாகம் செய்ய நெருப்பில் நெய் தேவை
தியாகம் செய்ய இருப்பில் மெய் தேவை
யாகம் தொடர தொடர் நெருப்பு தேவை
தியாகம் தொடர தொடர் விருப்பு தேவை
யோகம் செய்ய புறத் தூய்மை தேவை
தியாகம் செய்ய அகத் தூய்மை தேவை
மோசம் செய்ய அடாவடி தேவை
தியாகம் செய்ய விடாபிடி தேவை
மோசம் செய்வோருக்கு பணம் தேவை
தியாகம் செய்வோருக்கு மனம் தேவை
துரோகம் செய்து ஏமாற்ற நடிப்பு தேவை
தியாகம் செய்து காப்பாற்ற துடிப்பு தேவை
துரோகம் செய்வோருக்கு கல் நெஞ்சம் தேவை
தியாகம் செய்வோருக்கு நல் நெஞ்சம் தேவை
துரோகச் செயல் குறைந்திடல் உடனடித் தேவை
தியாகச் செயல் நிறைந்திடல் உடனடித் தேவை
துரோகம் செய்வோரை இகழ்ந்துத் தூற்றுவோர் தேவை
தியாகம் செய்வோரை புகழ்ந்துப் போற்றுவோர் தேவை!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment