சாலையும் பூஞ்சோலையும்
தரத்தோடு உருவாக்கப்பட்ட சாலை
மரத்தோடு வடிவமைக்கப்பட்ட சோலை
கருமையான புத்தம் புதிய சாலை
அருமையான சுத்தம் உடைய சோலை நல்ல தரத்தோடு தாராலான சாலை நல்ல தாவரத்தோடு தயாரான சோலை
பந்தாவோடு ஆரம்பமானது இவ்வேலை
பராமரிப்போடு தொடருமா இவ்வேலை?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment