சைவமான யானை
பசித்தாலும் தின்னப் பிடிக்காததை
நின்றுத் தின்னாது யானை
ருசித்தாலும் தின்னப் பிடித்ததை தின்றுத் தீர்க்காது யானை
உண்ட மரத்தை அடியோடு ஒடித்து அழிக்காது யானை
கண்ட மரத்தை கண்டபடிக் கடித்து உண்ணாது யானை
தடியால் அடித்த அடியை என்றுமே மறக்காது யானை
அடியாள் அடித்தத் தடியை என்றுமே மறக்காது யானை
அசிங்கமாய் கொன்றுத் தின்று அசைவமாய் வாழாது யானை
சிங்காரமாய் மென்றுத் தின்று
சைவமாய் வாழுது யானை!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment