இறைவனுக்கு நன்றி
உண்ண முழுமையான உணவில்லை
என்றாலும்
அனைத்து உயிரையும் வாழ வைக்கும் இறைவனுக்கு நன்றி!
வாயோடு மூக்கையும் சேர்த்து மூட வைத்தாலும்
திறந்துண்டு சுவாசிக்க அனுமதித்த
இறைவனுக்கு நன்றி!
வெள்ளப் பெருக்கெடுத்து கரை தாண்டித்
தாக்கினாலும்
வெயிலின் தாக்கத்தைக் குறைத்த இறைவனுக்கு நன்றி!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment