Sunday, 28 August 2022

தீயது யாதெனில்...

 

தீயது யாதெனில்...

எரிபொருள் ஆக்ஸிஜன் வெப்பமென முக்கோணத்தில் வந்தால் பிடிக்கும் தீ
இம்மூன்றும் எக்கோணத்தில் வந்தாலும் அக்கோணத்திலும் பிடிக்கும் தீ
மூன்றும் சேர்ந்தாலும் பொருளின் எரி வெப்ப நிலை வந்தால்தான் பிடிக்கும் தீ
எரியும்போது காற்றடித்தால் ஆக்ஸிஜன்
அதிகரிப்பால் பிடிக்கும் பெருந் தீ
முக்கோணப் பிணைப்பை உடைத்தால்
உடனே நின்றுவிடும் பிடித்தத் தீ
பிணைப்பை முன்கூட்டியே தடுத்தால் பிடிக்காது தடுக்கப்படும் தீ!

- தஞ்சை த இராமநாதன்


2 comments: