Tuesday, 16 August 2022

கை கொடுத்ததும் பை கொடுப்பதும்

 

கை கொடுத்ததும் பை கொடுப்பதும்

விழாவிற்கு வந்தோரை வரவேற்று கை கொடுத்தது பழமையாச்சு
வந்து செல்வோரை கட்டிப் பிடித்து வழி அனுப்பியதும் பழமையாச்சு
விழாவிற்கு வருவோரும் பையைத் தேடி வருவது புதுமையாச்சு
வந்து செல்வோருக்கு பையை ஓடிக் கொடுப்பதும் புதுமையாச்சு
கையைக் கொடுத்தாலும் காலை வாரி விட்டோர் சிலர் அது பழமையாச்சு
பையைக் கொடுத்தாலும் காலை வாரி
விடுவோர் பலர் இது புதுமையாச்சு!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment