யார் மேதை? யார் பேதை?
பேதைகள் நிறைந்து விட்டதால் மேதைகள் குறைந்து விட்டனரா?
மேதைகள் குறைந்து விட்டதால்
பேதைகள் நிறைந்து விட்டனரா?
தெரியாததையும் புரியம்படி சொன்னால் அவர்தான் நாடறிந்த மேதையா?
தெரிந்ததையும் புரியாதபடி சொன்னால் அவர்தான் நாடறிந்த பேதையா?
முனைவர் பட்டத்தை வாங்க முடிந்த அனைவரும் படித்த மேதைகளா?
முனைவர் பட்டத்தை வாங்க முடியாத
அனைவரும் படிக்காத பேதைகளா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment