Sunday, 10 April 2022

எது உருப்படியான வேலை?

 

எது உருப்படியான வேலை?

மண்ணை வெட்டி ஆறடிக்கு மேல் தூக்கி
வரப்பில் போட்டால் அது வேலை
நாற்றைப் பறிக்க குனிந்து வளைந்து வேலைப் பார்த்தால் அது வேலை
நாற்றுக் கட்டை நாற்றங்கால் முதல் நடவு வயல் வரை சுமந்தால் அது வேலை
கூடையில் உரத்தை தூக்கிக் கொண்டு மறு கையில் வீசினால் அது வேலை
வயலில் இறங்கி நடந்து களைகளைப் பறித்தால் அது அர்த்தமுள்ள வேலை
கதிர் அரிவாளோடு விளைந்தக் கதிரை அறுத்தால் அது அறிவுள்ள வேலை
கையை சுழற்றி களத்தில் நெல் கதிரை
அடித்தால் அது பலன்மிக்க வேலை    மரக்கால் படி கொண்டு நெல் அரிசியை அளந்தால் அது பழக்கப்பட்ட வேலை!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment