இயற்கையின் எதிர் வினை
தீயை வைத்து தீவைக் கொளுத்தினார்
ஆஞ்சநேயர் அது அன்று
தீய வினையால் தீவை வஞ்சித்தினர் சுயநலத்தினர் இது இன்று
தான் செய்த வினை தன் சந்ததியினை என்றாவது கொல்லும் அது அன்று
தான் செய்த வினை தன் சந்ததியினை
இன்றே கொல்லும் இது இன்று
சுடப்பட்டு இறந்தோரின் கண்ணீரோடு இரத்தம் கடலுடன் கலந்தது அது அன்று
கஷ்டப்பட்டு இரப்போரின் கண்ணீரோடு சத்தம் காற்றுடன் கலப்பது இது இன்று
மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது
மாறும் மாற்றம் இன்றும் தேவையானது
அடிப்படைத் தேவை என்றும் அவசியம்
அன்றாடத் தேவை இன்றும் அவசியம்
தீமை அகன்று நன்மைப் பெருகட்டும்!
அங்கும் இங்கும் எங்கும் எவருக்கும்!!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment