Thursday, 21 April 2022

உலகே மாயம்

 

உலகே மாயம்

மோசம் செய்து நாசம் செய்து
ஏய்த்துப் பிழைக்கும் உலகம்
துரோகம் செய்து விரோதம் செய்து கொலை செய்யும் உலகம்
குண்டைப் போட்டு சண்டைப் போட்டு கொன்று குவிக்கும் உலகம்
நிறம் பார்த்து நிலம் பார்த்து மக்களை வேறுபடுத்தும் உலகம்
சாதகமான காலம் பார்த்து நேரம் பார்த்து சமயத்தைப் பரப்பும் உலகம்
உழைத்துத் தின்று சமைத்துத் தின்று
உறுதியுடன் வாழ்ந்த உலகம்
நெருப்பைத் தின்று நெறியைக் கொன்று
அழியப் போகும் உலகம்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment