பொறுமை
பொறுத்தார் பூமி ஆள்வாரென்றால்..
பொறுத்தாலும் பொருத்தமற்ற நபரால் அடுத்தத் தேர்தலில் வெற்றிப்பெற முடியுமா?
பொறுமை கடலினும் பெரிதென்றால்..
பொறுத்தார் தன் எண்ண அலைகளால் பொங்காமல் இருக்க முடியுமா?
பூமியைப்போல் பொறுமை வேண்டுமென்றால்..
பூமியைப்போல் வெட்டும் குத்தும் வாங்காமல் இருக்க முடியுமா?
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்க வேண்டுமென்றால்..
ஆக்கி சமைத்ததை ஆற விட்டா ல்
சூடு பறக்க சாப்பிட முடியுமா?
பொறுமை பெருமை தருமென்றால்..
அந்தப் பெருமை ஏமாந்தவருக்கும் கிடைக்குமென சொல்ல முடியுமா?
வெந்ததைத் தின்று விதி வந்தபோது சாகும் பொறுமை தேவையா?
தும்பை விட்டு வாலைப் பிடித்துத் தொங்கும் பொறுமை தேவையா?
குட்டக் குட்டக் குனிந்து கழுத்தும் குட்டையாகும் பொறுமை தேவையா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment