நாய்-எருமை தரும் பாடம்
எருமையாய்ப் பிறந்து பொறுமையாய் இருந்து பெருமையை அடைந்தாய்
நாயாய்ப் பிறந்து ஆடா அமைதியாய் அமர்ந்து பெருமையைத் தந்தாய்
ஒன்றோடு ஒன்றாய் கூடி நின்றாய்
காணும் கண்களைக் கூட்டிக் கவர்ந்தாய்
அகங்கார மனிதனுக்கு பாடம் தந்தாய்
வஞ்சகர்களுக்கு படிப்பினைத் தந்தாய்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment