வரி அதை விவரி
வரிக்கு வரி விலையைப் பற்றி விவரித்தோம் நேற்று விவரமாக
வரிக்கு வரி வரியைப் பற்றி விவரிப்போம் இன்று சுருக்கமாக
வரிக்கு மேல் வரியை உயர்த்தினால்
வறியவரால் வாழ முடியுமா?
வரிக்கு வரி வாயைப் பிளந்தால்
வரியைக் குறைக்க முடியுமா?
அல்லது...
வரிக்கு மேல் வரியைக் கூட்டினால்
வடிப்பவர் கவிஞராக முடியுமா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment