Sunday, 17 April 2022

மரமும் நாமும்

 

மரமும் நாமும்

மரம் நடுவதை வேடிக்கை ஆக்க வேண்டாம்
மரம் நடுவதை வாடிக்கை ஆக்க வேண்டும்

மரம் நட பல வண்ணத் துணிகள் வேண்டாம்
மரம் நட பல எண்ணப் பணிகள் வேண்டும்

மரம் நட்டு படம் எடுப்போர்க்கு விளம்பரம் வேண்டும்
மரம் நட்டு இடம் காப்போர்க்கு விளம்பரம் வேண்டாம்

இதில்,
நாம் யாரென நமக்குத் தெரியும்!    யாராயினும், மரத்தை நடுவது நலமே!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment