Sunday, 17 April 2022

உடனே வேண்டும்

 

உடனே வேண்டும்

பாதை மாறிப் போகும் பிள்ளையர்களை
உடனே கண்டிக்க வேண்டும்
பாதையை மாற்றும் தொல்லையர்களை உடனே தண்டிக்க வேண்டும்
படிக்காது படித்தவர் போல் நடிப்பவரை
உடனே தடுக்க வேண்டும்
மேடைதோறும் அளவற்றுப் பேசுபவரை
உடனே அடக்க வேண்டும்
நாள்தோறும் ஊரை ஏமாற்றுபவரை
உடனே ஒதுக்க வேண்டும்
இரக்கமற்ற கொடும் ஈனப் பண்பினரை
உடனே உதைக்க வேண்டும்
பணத்திற்காக பல வேஷம் போடுபவரை
உடனே வதைக்க வேண்டும்
சுகத்திற்காக பெற்றோரை மறப்போரை
உடனே திருத்த வேண்டும்

மாற்றத்தை செய்யத் தகுந்த மானிடரை
....இயற்கை....
உடனே ஆசீர்வதிக்க வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment