Friday, 29 April 2022

பாவேந்தரின் புரட்சி வெறும் கனவா?

 

பாவேந்தரின் புரட்சி வெறும் கனவா?

தமிழை அமிழ்தென்றார் பாவேந்தர்
தமிலை அமில்தென்றார் தமிழறிந்தார்

பெண்டிரை குடும்ப விளக்கென்றார்
குடும்பத்தை விலக்கென்றார் இளையர்

காதல் கடமையென்றார் பாவேந்தர்
உல்லாசம் உரிமையென்றார் இளையர்

முதுமையில் காதலென்றார் பாவேந்தர்
முதியோர் இல்லமென்றார் இளையர்

எதிர்பாராத முத்தமென்றார் பாவேந்தர்
எதிர்பார் நித்தமென்றார் இளையர்

வாழ்வோர்க்கு ஐந்து ஒழுக்கமென்றார்
இல்லாது வாழ்வோமென்றார் இளையர்

இன்பத்தை கடலென்றார் பாவேந்தர்
இன்பமே ஆடலென்றார் இளையர்

சிந்தனை சிரிக்குமென்றார் பாவேந்தர்
சிரிப்பாய் சிரிக்கின்றார் சிந்தித்தார்!

- தஞ்சை த இராமநாதன்




2 comments:

  1. நல்ல கருத்தை விதைத்துள்ளீர்கள்!

    ReplyDelete