எது போராட்ட வாழ்வு?
நாட்டினில் பிறந்து
வீட்டினில் தவழ்ந்து
தொட்டிலில் அயர்ந்து
கட்டிலில் மகிழ்ந்து
காட்டினில் மறைந்து
முடிவுக்கு வரும் மனிதயின வாழ்வு போராட்ட வாழ்வா?
காட்டினில் பிறந்து
காட்டினில் நடந்து
காட்டினில் திரிந்து
காட்டினில் மகிழ்ந்து
காட்டினில் மறைந்து
முடிவுக்கு வரும் விலங்கின வாழ்வு போராட்ட வாழ்வா?
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment