சம்பளமும் விலைவாசியும்
வேட்டையாட சீறிப் பாயும் சிறுத்தை வேகத்தில் விலைவாசி சீறிப் பாயலாம்
பந்தயத்தில் குதித்தோடும் குதிரையாக பெட்ரோல் விலை குதித்து ஏறலாம்
பயந்தோடும் முயலின் முழு வேகத்தில்
மின்சார விலை ஏறிப் போகலாம்
சிறுத்தை சோர்ந்துப் போய் ஓட முடியாது
ஓய்ந்துப் போகலாம்
குதிரையும் சோர்ந்துப் போய் ஓடாது சாய்ந்துப் போகலாம்
முந்த முடியாத முயலோ புதரில் புகுந்து பயந்துப் போகலாம்
நெடுந் தூரமானாலும் மாறா வேகத்தில் விவேகத்துடன் முயலும் ஆமை போல்
கிடைக்கும் வருமானத்தை வைத்து
சீரான வாழ்வை வாழ்வதில்தான் சுகம்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment