Thursday, 7 April 2022

இமை கண்ணைக் காப்பது போல

 

இமை கண்ணைக் காப்பது போல

கோழி தன் குஞ்சுகளைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
நாய் தன் குட்டிகளைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
மாடுகள் தன் கன்றுகளைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
தேனீக்கள் தன் கூட்டைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
கங்காரு தன் குட்டியைச் சுமப்பது
இமை கண்ணைக் காப்பது போல
பூவை மொட்டு மூடிக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
தாய் தன் பிள்ளைகளைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
இவை யாவும் இயற்கையாக நடந்தால் நன்றே!

நாட்டுத் தலைவர்கள் நாட்டைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
ல ள ழ உச்சரிப்போடு தமிழைக் காப்பது
இமை கண்ணைக் காப்பது போல
இவை யாவும் முறையாக நடந்தால் நன்றே!

தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment