அடிக்கு அடி அதிரடி
காய்த்த மரத்தை கல்லால் அடிப்பது காய்ப்பை உயர்த்தத்தான் என்பதா?
தனி மனிதனைக் கல்லால் அடிப்பதும்
அவரை உயர வைக்கத்தான் என்பதா?
குட்டக் குட்டக் குனிந்தால் குட்டுபவன் குட்டை குட்டிக் கொண்டே இருப்பான்
கையைத் தட்டத் தட்ட பேசிப் பிதற்றுபவன் பித்தலாட்டத்தை தொடரவே செய்வான்
அடங்கி அடங்கிப் போனால் அடக்கம் செய்யத் துடித்திடும் திருட்டு உலகமிது
ஒதுங்கி ஒதுங்கிப் போனால் முடக்கம் செய்யத் துணிந்திடும் முரட்டு உலகமிது!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment