தூணிலும் துரும்பிலும்
மண்ணாலாகி கடலில் கரைவாய்
கல்லாலாகி காட்சித் தருவாய்
காட்சியாகி மக்களைக் கவர்வாய்
கட்சிகளுக்கும் கருணைப் புரிவாய்
உண்மையில்லார்க்கும் உதவிப் புரிவாய்
உண்மையானவர்களை கைவிடாமல் காப்பாய்
வெண்கலத்துடன் விளக்கானால் ஒளிர்வாய்
பொன்னாலானால் கடத்தப்பட்டு ஒளிவாய்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment