தகடூராம் தர்மபுரியாம் தருமபுரியாம்
சங்ககால தகடூராக இருந்த தருமபுரி; இரும்பு நிறைவாக இருந்த தருமபுரி
கிரானைட் பரவி இருக்கும் தருமபுரி; ஒகேனக்கல் அருவி இருக்கும் தருமபுரி
ஆதியினம் பலர் வாழ்ந்தயிடம் தருமபுரி; ஆதீனம் சிலர் வாழுமிடம் தருமபுரி
தீர்த்தகிரிஸ்வரர் தீர்த்தம் தரும் தருமபுரி; மலைநீர் தீர்த்தம் தரும் தருமபுரி
அரியபெரும் அரசர்கள் ஆண்ட தருமபுரி; அதிசய அதியமான் ஆண்ட தருமபுரி
பாப்பிரெட்டிப்பட்டி இருக்கும் தருமபுரி; பாப்பாரப்பட்டி இருக்கும் தருமபுரி
வாணியாறு அணை இருக்கும் தருமபுரி; வரட்டாறு அணை இருக்கும் தருமபுரி
முக்கியமாக -
தருமம் புரி என புரிய வைக்கும் தருமபுரி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment