சகிப்புத் தன்மை மிகுந்தக் கடமை
தூங்க முடியாதவரை முடிந்தவரை தூங்காதுக் காப்போர் செவிலியர்
தூங்கி விழித்ததும் தூக்கி வைத்து
தாங்கிப் பிடிப்போர் செவிலியர்
வலிக்குது ஊசியென்போரிடம்
வலி காக்கத்தான் ஊசியென்போர் செவிலியர்
வாந்தி எடுப்போரிடம் முந்தி வந்து வாந்தியை எடுப்போர் செவிலியர்
மறதிக்கு மருந்தை அளந்து எடுத்து மறக்காமல் கொடுப்போர் செவிலியர் மருத்துவரை மறந்து விட்டாலும் மறவாத நினைவில் நிற்போர் செவிலியர்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment