Saturday, 14 May 2022

முட்டையைச் சுற்றி தேனடை

 

முட்டையைச் சுற்றி தேனடை

குருவிக் கட்டியது முட்டைக்குக் கூடு
வளைத்துக் கட்டியதோ தேனீக் கூடு
கட்டிய இரண்டும் தனித்தனி வீடு
சேர்ந்தே இருப்பதால் கூட்டணி வீடு

கூட்டுக் குடும்பத்தைப் பிரித்தால் கேடு
கூட்டுக் குடும்பத்தை என்றென்றும் நாடு
உறவுகளைப் பிரியாது உறவைத் தேடு
உரிமையான உறவுக்குள் ஏது கேடு?

கோயிலோடு கோட்டை சேர்ந்ததால் கோழிக்கோடு
இரு ஓடைகள் ஒன்றாய்ச் சேர்ந்ததால் ஈரோடு
தென்னைகள் கூட்டு எங்க கீழக்காடு
காய்கறிகள் கூட்டு நம்ம கோயம்பேடு!

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment