உலகில் புத்தருக்குப் பக்தர்களும் ஏராளம்
உலகில் புத்தருக்கு சிலைகளும் தாராளம்
பக்தர்களின் மன பக்தியால் புத்தருக்குச் சிலைகள் வருகின்றனவா?
பக்தர்களின் பண சக்தியால் புத்தருக்குச் சிலைகள் வருகின்றனவா?
புத்தருக்குச் சிலைமேல் ஆசை என்றும் இல்லவே இல்லை
பக்தருக்குச் சிலைமேல் ஆசை இன்றும் இல்லாமல் இல்லை ஆசைதான் துன்பத்திற்கே அடிப்படைக் காரணம் அது புத்தர் ஆசைதான் இன்பத்திற்கே அடிப்படைக் காரணம் இது பக்தர் ஆசையை அடியோடு துறந்து வாழ்ந்து அரண்மனையை இழந்தார் புத்தர் அரண்மனையை ஆர்வத்தோடு அடைந்து ஆசையின் பிடியோடு வாழ்ந்தால் பக்தர்
இதைப் பார்த்துதான் புத்தர் சிரித்தாரா? இதைப் பார்த்தபின் பக்தர் சிந்திப்பாரா?
- தஞ்சை த.இராமநாதன்

Super! 👌
ReplyDelete🙏
ReplyDelete