Tuesday, 7 February 2023

கால் நீங்குதலும் கால் வாங்குதலும்

 ப-பா, ம-மா, த-தா 

கால் நீங்குதலும் கால் வாங்குதலும்

காலையில் கால் நீங்கினால் கலையாகிவிடாதா?
கலையில் கால் வாங்கினால் காலையாகிவிடாதா?
மாலையில் கால் நீங்கினால் மலையாகிவிடாதா?
மலையில் கால் வாங்கினால் மாலையாகிவிடாதா?

பாடையில் கால் நீங்கினால் படையாகிவிடாதா?
படையில் கால் வாங்கினால் பாடையாகிவிடாதா?
தாடையில் கால் நீங்கினால் தடையாகிவிடாதா?
தடையில் கால் வாங்கினால்
தாடையாகிவிடாதா?

காடியில் கால் நீங்கினால்        கடியாகிவிடாதா?                                          கடியில் கால் வாங்கினால்    காடியாகிவிடாதா?                                      தாடியில் கால் நீங்கினால்      தடியாகிவிடாதா?                                            தடியில் கால் வாங்கினால்  தாடியாகிவிடாதா?

தோட்டியில் கால் நீங்கினால் தொட்டியாகிவிடாதா?
தொட்டியில் கால் வாங்கினால் தோட்டியாகிவிடாதா?
போட்டியில் கால் நீங்கினால்    பேட்டியாகிவிடாதா?
பேட்டியில் கால் வாங்கினால் போட்டியாகிவிடாதா?

போகத்தில் கால் நீங்கினால் பேகமாகிவிடாதா?
பேகத்தில் கால் வாங்கினால் போகமாகிவிடாதா?
மோகத்தில் கால் நீங்கினால் மேகமாகிவிடாதா?
மேகத்தில் கால் வாங்கினால் மோகமாகிவிடாதா?

மாதத்தில் கால் நீங்கினால்    மதமாகிவிடாதா?
மதத்தில் கால் வாங்கினால் மாதமாகிவிடாதா?
பாதத்தில் கால் நீங்கினால்    பதமாகிவிடாதா?
பதத்தில் கால் வாங்கினால் பாதமாகிவிடாதா?

பாலத்தில் கால் நீங்கினால்  பலமாகிவிடாதா?
பலத்தில் கால் வாங்கினால் பாலமாகிவிடாதா?
காலத்தில் கால் நீங்கினால்  கலமாகிவிடாதா?
கலத்தில் கால் வாங்கினால் காலமாகிவிடாதா?

மானத்தில் கால் நீங்கினால் மனமாகிவிடாதா?
மனத்தில் கால் வாங்கினால்
மானமாகிவிடாதா?
தானத்தில் கால் நீங்கினால்  தனமாகிவிடாதா
தனத்தில் கால் வாங்கினால்
தானமாகிவிடாதா?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment