Saturday, 4 February 2023

உளறுவார் உலருவதை உணர்வாரா?

 

உளறுவார் உலருவதை உணர்வாரா?

உளறுவதை உணராமல் உளறுதலும் உளறுதலே
உளறுவதை உணர்ந்து உளறுவதும் உளறுதலே

உலருவதை உணராமல் உலர்த்துவதும் உலர்த்துதலே
உலருவதை உணர்ந்து உலர்த்துவதும் உலர்த்துதலே

உளறியவர் உளறி உளறி உளறுவதும்
உளறுதலே
உளறியவர் உளறி உளறி உணராததும் உளறுதலே

உலரும் உணவை உலர்த்தி உண்பதும் உணவே
உலராத உணவை உலராது உண்பதும்
உணவே

உளறும் உண்மையை உளறுவோரும் உணர்வாராக
உலராத உணவை உண்போரும் உணர்வாராக!

- தஞ்சை த.இராமநாதன்


2 comments: