Friday, 3 February 2023

சிலையை விரும்பாத மாமனிதர்

 


சிலையை விரும்பாத மாமனிதர்

அரை நூற்றாண்டுக்கு முன் சின்னஞ்சிறு மீன்பிடித் தீவு
அரை நூற்றாண்டுக்குள் அகில உலகிலும் முன்னணித் தீவு

இயற்கை வளமே இல்லாத சின்னஞ்சிறு  ஊர் சிங்கப்பூர்
மனித வளத்தை பாரெங்கிருந்தும் ஈர்க்கும் ஊர் சிங்கப்பூர்

தன்னால் முடியும் என்பதை முடித்துக் காட்டிய சிங்கப்பூர்
தன் மக்களை உலகிலேயே உயர்த்திக் காட்டிய சிங்கப்பூர்

அத்தனையையும் செய்து முடித்தவர் மாமனிதர் லீ குவான் இயூ
இத்தனையையும் வாழ்நாளிலேயே செய்து முடித்தவர் லீ குவான் இயூ

தனக்கு சிலை வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டார் லீ குவான் இயூ
பிறந்த இறந்த நாட்களை கொண்டாடி திண்டாட வைக்காத லீ குவான் இயூ

யாமறிந்தத் தலைவவர்களிலே இவரைப்போல் எங்கும் காணோம்!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: